( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேசத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ் சங்கமன் கிராமம் ,தங்கவேலாயுதபுரம்,கஞ்சிகுடியா று ஆகிய கிராமங்களில் சௌபாக்கியா உற்பத்திக் கிராம செயற்றிட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள 30 பயனாளிகளில் முதற்கட்டமாக 15 பயனாளர்களுக்கு அவர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு ஆடுகள் நேற்று முன்தினம் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன், உதவிச்செயலாளர் திருமதி எஸ்.நிருபா,கணக்காளர் ஏ.எல்.எம்..றிபாஸ்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உஷாந்த்
மற்றும் பயனாளர்களின் பிரிவுகளுக்குரிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment
Post a Comment