உணவுகள் சிலவற்றின் விலைகள், குறைக்கப்படுகின்றன




 



மின்சாரக் கட்டணக் குறைப்பிற்கு நிவாரணமாக இன்று (16) நள்ளிரவு முதல்  உணவுகள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, உணவுப் பொதி  ஒன்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.

இதேவேளை, ரைஸ் மற்றும் கொத்துவின் விலை 25 ரூபாவினாலும், பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிறு உணவுகளின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.

அதேபோல், தேநீரின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இச்சலுகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உணவக உரிமையாளர்களிடம்  ஹர்ஷன ருக்ஷான் கேட்டுக்கொண்டார்.