உலக விளையாட்டுத் திருவிழாவான #ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா ஆரம்பம்




 



பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று (ஜூலை 26)அதிகாரப்பூர்வமாக தொடக்க விழாவுடன் துவங்குகிறது. ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் போட்டிகள் வரை நடைபெறுகின்றன.

கடந்த 100 ஆண்டுகளில் பிரான்ஸ் தலைநகர் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

1900 மற்றும் 1924 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரத்தில் நடைபெற்றன. இப்போது மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெறுகின்றன.

இதன் மூலம் லண்டன் நகரத்​திற்குப் பிறகு மூன்​றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரம் என்ற பெரு​மையைப் பெற்றிருக்கிறது பாரிஸ். இதற்காக பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.