பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தின் கரைவாகுப்பற்று மருதமுனை -01 க்கான முஸ்லிம் விவாகப்பதிவாளராக 2022.05.24 ஆம் திகதி முதல் கடமையாற்றி வந்த சமாதான நீதவான் முகம்மது யூசுப் முகம்மது அக்றம் தனது பதவிக்கு மேலதிகமாக புதன்கிழமை (17)முதல் செயற்படும் வண்ணம் அதேபிரிவிற்கான பிறப்பு -இறப்பு பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக்கடிதத்தை அம்பாரை கச்சேரியில் வைத்து மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவரும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.ஐ.எம். முகர்றப் முன்னிலையில் பெற்றுக்கொண்டார்.
Post a Comment
Post a Comment