நூருல் ஹுதா உமர்
இலைமறைகாயாக ஒளிந்திருப்பவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களது எழுத்தாக்கத்திற்கு உயிரூட்டும் வகையில் செயல்பட்டு வரும் ஏட்டுலா கனவாக்கத்தால் வெளியிடப்பட்ட அக்கரைப்பற்று முபீதா அமீன் எழுதிய அவரது கன்னிப் படைப்பான "நிதர்சனத்தின் நிழல்" கவிதை நூல் வெளியீட்டு விழா அக்கரைப்பற்று கலை இலக்கிய பேரவையின் தலைவர் கலாபூசனம் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கலாச்சார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் கலந்து சிறப்பிதத்துடன், ஓய்வுநிலை நில அளவையாளர் ஏ.எல்.மொஹிதீன் பாவா, அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி என்.நவப்பிரியா ஆகியோரும் மற்றும் பல இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment