உணவுக் கடைகள் விசேட பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும்!




 


( வி.ரி.சகாதேவராஜா)


திருவிழாக் காலங்களில் ஆலய வளாகத்தில் நடாத்தப்படும் உணவுக் கடைகள் விசேட பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று 
திருக்கோவில்ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு  கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது நேற்று முன்தினம் (8)திங்கட்கிழமை திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய ஆடி உற்சவமானது எதிர்வரும் 2023.07.18கொடிஏற்றத்துடன் ஆரம்பித்து 2023.08.04ம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளது.

இக்காலபகுதியில் ஆலயத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நலன்புரி சேவைகள் தொடர்பாக திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இவ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.நிருபா,திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.எம்..மோகனகாந்தன், ஆலய பரிபாலன சபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ்,  திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் திருமதி வீரபத்திரன, திருக்கோவில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன்,கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர்  என்..கந்தசாமி ,மற்றும் திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய நிருவாகசபை உறுப்பினர்கள், திருக்கோவில் பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள், மற்றும் அதன்  உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

துறைசார்ந்த பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.