சம்மாந்துறை பிரதேச சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்பு




 


நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச கருவாட்டுக்கல் 3ம் கிராம சேவகர் பிரிவுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்பு கூட்டம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் (27) சம்மாந்துறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, உச்ச பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளருமான ஏ.சீ. சமால்டீன், சம்மாந்துறை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி யு.கே. சலீம், சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் அர்சாத் இஸ்மாயில், சம்மாந்துறை மத்திய குழு செயலாளர், எம்.எஸ்.எம். அசாருதீன், பேராசிரியர் எஸ்.எல். றியாஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.