இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கட்டிட புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு




 



நூருல் ஹுதா உமர்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கட்டிட மேல்தள வேலைகளுக்காக 4.9 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தை நம்பிக்கையாளர் சபையினரிடம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.எல். முஸ்னி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எஸ்.எல்  நிஷார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், சிரேஷ்ட ஆலோசகர் எம்.ஏ. கலீல் ரஹ்மான், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், ஜமாஅத்தினர், ஊர் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.