மாளிகைக்காடு செய்தியாளர்
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாசிகசாலை இன்று (06) சனிக்கிழமை வைபவரீதியாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள கலாச்சார மேம்பாட்டு பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ரணசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு பிரதம அதிதியுடன் இணைந்து இந்த வாசிகசாலையை திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் கலாசார மத்திய நிலைய அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் அஸ்வான் மௌலானா, உப செயலாளர் நூருல் ஹுதா உமர், பொருளாளர் ஏ.பி.எம். நௌஸாத் உட்பட நிறைவேற்று சபையினரும், பிரதேச மூத்த இலக்கியவாதிகள், கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வாசிகசாலைக்கான அங்கத்துவம் தொடங்கி வைக்கப்பட்டதுடன், பிரதேச எழுத்தாளர்கள் தமது நூல்களை குறித்த வாசிகசாலைக்கு அன்பளிப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment