புதுவருட தின முஹர்ரம் நிகழ்வு





 மாளிகைக்காடு செய்தியாளர்


இஸ்லாமிய கலண்டரின் முதல் மாதமாக புனித முஹர்ரம் - 1446 புதுவருடத்தினை நினைவு ௯றும் வகையில் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் சுற்று நிரூபத்துக்கு அமைவாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) "மகிழ்ச்சிகரமான முஹர்ரம்" எனும் தொனிப்பொருளில் கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் முஹர்ரம் நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முஹர்ரம் நிகழ்வை ஞாபகப்படுத்தும் நல்லுபதேசங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை இஸ்லாம் பாட ஆசிரியர் மௌலவி ஏ.ஜி. முகம்மது நதீர் அவர்களினால் நிகழ்த்தப்பட்டன. மேலும் இத்தினத்தில் எமது தாய் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பொருளாதார முன்னேற்றம், சுபீட்சம், ஐக்கியம், சௌபாக்கியம் வேண்டி விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றன.

இந்நிகழ்வினை கல்லூரியில் தற்காலிக இணைப்பு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி சமதா மசூது லெவ்வை, ஏ.எச். நதீரா, உதவி அதிபர்களான எம்.எஸ். மனுனா, என்.டி. நதீகா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்