நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் உள்ள மர ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், மரம் அறுக்கும் ஆலை தீப்பற்றியதுடன் மரங்களில் சிலவை எரிந்து சாம்பலாகி உள்ளது.
இன்று மாலை குறித்த மர ஆலையில் தீ பரவியதுடன், பிரதேசவாசிகள் மற்றும் கல்முனை மாநகரசபையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும், இதன் போது உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது
Post a Comment
Post a Comment