வருடாந்த பொதுக் கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில்




 


சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது.

பொதுக் கூட்டம் ஜூலை 19 முதல் 22 வரை நடைபெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, கிழக்கு ஆசியா பசிபிக் மற்றும் ஐரோப்பா போன்ற பிராந்தியங்களை உள்ளடக்கிய உலகெங்கிலும் உள்ள 108 ஐசிசி உறுப்பு நாடுகளில் இருந்து 220 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த கிரிக்கெட் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளர்..