அக்கரைப்பற்றின் முதலாவது சட்டத்தரணியும் கிழக்கிலங்கையின் முது பெரும் சட்டத்தரணியுமாகத் திகழ்ந்தவர் மர்ஹீம் தாஹா செய்னுதீன். இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மறைந்தவர்.
அவர் பிறந்த இடம் அக்கரைப்பற்று இரண்டாம் குறிச்சி. பிஸ்கால் வீதி மற்றும் டவுன் பள்ளி வீதியை இணைக்கும் வீதி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இல்லற வாழ்வை கல்முனையில், அமைத்துக் கொண்டாலும், அக்கரைப்பற்றில் அவர், ஆற்றிய அரும் பணிகளுக்காக, அவரது பிறந்தகமாக காணப்பட்ட இடத்தில் அமையப் பெற்றிருந்த வீதிக்கு, தாஹா செய்னுதீன் வீதி என்பதாப் பெயரிடப்பட்டிருந்தது.
மிக நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த அக்கரைப்பற்று தாஹா செய்னுதீன் வீதி (அந்நூர் வீதி) கொங்கிரீட் இடப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது
இந்த வீதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்
Post a Comment
Post a Comment