மொட்டுக்கட்சி எட்டாக வெடிப்பு!!




 



ஜனாதிபதி ஆசனத்தில் அமர வைப்பது  உறுதி என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளனர். 



திரு. சஜித் பிரேமதாஸ  ஜனாதிபதியாக வரும் பட்சத்தில் இந்நாட்டின் வாழக்கூடிய ஏழைகளுக்கான நல்லாட்சி, மற்றும் சமகாலத்தில் காணப்படக்கூடிய நடைமுறை சிக்கல்கள், நாட்டில் காணப்படக்கூடிய பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வுகள், கல்வி அபிவிருத்தி, சுகாதார அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, கைத்தொழில் புரட்சி, சுயதொழில் முயற்சியால்களை ஊக்குவித்தல், நவீன விவசாய முறைகள், மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், பொருட்களின் விலை குறைப்பு, இன்னும் அதிக அபிவிருத்திகள் நாட்டில் உருவாகும் இதற்கு நிச்சயம் சஜித் பிரேமதாஸ அவர்கள் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற கருத்தினையும் பொத்துவில் தொகுதியின் அமைப்பாளர்  வெள்ளையன் வினோகாந்த் தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

 

 இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த திரு. சந்திரதாச கலப்பத்தி அவர்கள் கூறுகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச அவர்கள் வெற்றி அடைவதை இங்கே கூடி இருக்கும் மக்கள் உறுதி செய்கிறார்கள் என்பதுடன் அம்பாறை மாவட்டத்தில் வாழக்கூடிய அனைவரும் கட்சி பாகுபாடு இன்றி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளும்படியாகவும் அனைவரையும் அன்பாக வரவேற்று அழைத்திருந்தார் அதே சந்தர்ப்பத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து வருகை தந்திருந்த தவிசாளர்கள் உப தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்டத்தில் பணியாற்றக்கூடிய தலைவர்கள் அனைவரையும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வும் திரு. அசோகா அபே சிங்க அவர்களும், திரு. சந்திரதாச களப்பத்தி அவர்களும் திரு. வெள்ளையன் வினோகாந்த் அவர்களும் மாலை அணிவித்து அவர்களை அன்புடன் வரவேற்று அவர்களுக்கான ஆசனங்களில் அமர வைத்து அவர்களுடைய பிரவேசமானது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதனை சபையார் அனைவரும் தெரிந்து கொள்ளு முகமாக வெளிப்படுத்தியமை இங்கே குறிப்பிடத்தக்க நிகழ்வின் விசேட அம்சமாகும். எனவே திகாமடுள்ள மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றியானது 100 வீதம் உறுதி செய்யப்பட்ட வெற்றியாக உருமாறியுள்ளது என்ற உணர்வானது இந்த நிகழ்வின் போது கலந்து கொண்ட அனைவரது மனதிலும் ஆணிவேராக பதிந்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. நன்றி.