சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு அழைப்பு - அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு




 


பாறுக் ஷிஹான்

 
இலங்கையின் ஆசிரியர்  அதிபர்களுக்கு எழுத்து மூலம் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த சம்பள முரண்பாட்டுத் தீர்வின்படி  வழங்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு போராட்டங்கள் செய்தும் பலனில்லாத நிலையில் எமது  ஆசிரியர்இ அதிபர் தொழிற்சங்கக்கூட்டணி   செவ்வாய்கிழமை (09) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.


எஞ்சிய 2/3 சம்பள ஏற்றத்தாழ்வை வென்றெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்கின்ற நாம், தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட ஆட்சியாளர்கள் வழியமைக்காமல் எமது நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்த்து எங்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

தவறும் போது, தொடர் போராட்டங்களை நடத்துவதற்கும் நாங்கள் தயங்கமாட்டோம். இதனால் நாட்டில் ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்கு ஆட்சியாளர்கள் முகங்கொடுக்க வேண்டி வரலாம் என்றும் குறிப்பிட்டார்.


இச்செய்தியாளர் சந்திப்பில்  இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் அம்பாறை மாவட்டச்செயலாளர் எம்.எஸ்.சத்தார், ஆசிரியர் சேவை சங்கத்தின் உறுப்பினர் ஏ.சியாம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கல்முனை கல்வி வலயச்செயலாளர் எம்.எஸ்.எம்.சியாத், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கல்முனை கல்வி வலய இணைப்பாளர் ஏ.எம்.எம்.ஸாகிர் ஆகியோரும் கலந்து கொண்டு   கருத்து வெளியிட்டனர்.