திருகோணமலை இந்துக் கல்லூரியை வீழ்த்திய ஸாஹிரா கல்லூரி..!




 


நூருல்  ஹுதா உமர்

நீண்ட இடைவெளியின் பின்னர் இவ் வருடம் கல்முனை சாஹிரா கல்லூரியில் மேசைப்பந்து (Table Tennis) விளையாட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு ஜூலை 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் திருகோணமலை சென்.மேரிஸ் கல்லூரியில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட போட்டியில் 16 வயதிற்குட்பட்ட வயது பிரிவில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் போட்டியில் திருகோணமலை இந்துக் கல்லூரியோடு விளையாடி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்ததோடு விளையாட்டு அறிமுகப்படுத்தி பங்கு பற்றிய முதல் வருடத்திலேயே இந்த பாடசாலை காலிறுதி வரை முன்னேறியது.
இவ் அடைவிற்காக உறுதுணையாய் இருந்து மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம். ஐ. ஜாபிர் அவர்களுக்கும் மற்றும் பிரதி அதிபர்கள், இவ்விளையாட்டை எமது பாடசாலையில் மீண்டும் அறிமுகப்படுத்தி பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் எம். எச். எம். முஸ்தன்சிர் மற்றும் மாணவர்களை அழைத்துச் செல்ல உதவியாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் எம்.எம்.றஜீப் மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளை மேற்கொண்ட பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் இந்த விளையாட்டுக்குத் தேவையான Table Tennis Board ஐ பெற ஒத்துழைப்பு வழங்கிய பழைய மாணவர்களுக்கும் நன்றிகளை பாடசாலை சமூகம் தெரிவித்துக் கொண்டுள்ளது.