கணித ஆசிரியரை கத்தியால் குத்தினார், மாணவன்!




 


பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் புத்தளத்தில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த ஆசிரியர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானவர் பிரதான நிலை பாடசாலையின் கணித பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.