பயிற்சி பட்டறை







பாறுக் ஷிஹான்

கல்முனை  அஸ்-ஸுஹறா வித்தியாலய தரம் 05 மாணவர்கள்  ஆசிரியர்களுக்கான பரீட்சை வழிகாட்டலும் ஞாபகசக்தியை அதிகரித்தல் தொடர்பாகவும் பயிற்சி பட்டறை இன்று நடைபெற்றது.

 அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதிய்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக அஷ்ஷேய்ஹ் ஆதில்ஹசன்  கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில்  உதவி அதிபர்  ஏ. எப். மிஸ்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர்   எஸ். எல். ஏ. அமீர், வகுப்பாசிரியர்களான எம். எச். றஹானா, எம. பி. பாயிசா, எஸ்.ரி.றிசானா, யு. இஸட். ஸவாஹிறா  உள்ளிட்டோர்   கலந்து கொண்டனர்.

மேலும் தரம் 05 மாணவன் முஹம்மட் பிலால் அப்ஷாரியின் தந்தை அப்துல் ஜப்பார் றிபாய்  அனுசரணையில் வளவாளர்  ஆதில்ஹசன்   கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.