பொன் விழாக் காணும் சிரேஷ்ட சட்டத்தரணி சரோஜினிதேவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!




 



யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருமதி சரோஜினி இளங்கோவன் அவர்கள்.கடந்த  5 தசாப்தங்களாக வட இலங்கையில் சட்டத்தரணியாகத் தொழில் புரிந்து வருபவர்.  வட இலங்கையில் சிரேஸ்ட வழக்கறிஞர்ளில் இவரும் ஒருவர்.இவரிடம் 35 கனிஸ்ட சட்டத்தரணிகள் பணி புரிந்துள்ளார்கள்.மல்லாகம் நீதிமன்ற நீதிபதியாகவும் தொழில்பட்டவர்.37 வருடங்களின் பின்னர்,மீள் உருவாக்கம் பெற்ற ஊர் காவற்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்வர்.

சட்டத்துறையில் இவர் 50 வருட காலங்களில் ஆற்றிய சமூகஞ்சார் அரும் பணிகளைக் கௌரவிக்கும் முகமாகஈ அண்மையில், யாழ்ப்பாணத்தில் பொன் விழாக் பொண்டாட்டம் இடம்பெற்றது. இதில்,  நீதிபதிகள், சட்டத்தரணிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சட்டத்துறையில் பொன் விழாக் காணும்,சிரேஷ்ட சட்டத்தரணி சரோஜினிதேவி இளங்கோவன் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் பணிபுரிய www.ceylon24.com குழுமம் சார்பில் நாமும் வாழ்த்துகின்றோம்!