வன விலங்குகளால் பாதிக்கப்பட்டர்களுக்கான நட்டஈடு




 


பாறுக் ஷிஹான்

 
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் கடந்த வருட பிற்பகுதில் யானை மற்றும் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட 80 பயனாளிகளுக்கு
சுமார் 6 மில்லியன் நஸ்டஈட்டு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(23) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் அஸாருத்தீனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு நஸ்ட ஈட்டு காசோலைகளை வழங்கி வைத்தார்.

மேலும் இந் நிகவில் உதவிப் பிரதேச செயலாளர் யூ.எல் அஸ்லம்(LLB),முன்னாள் அரசாங்க அதிபரும்,சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவருமான ஐ.எம் ஹனீபா,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(காணி) பரீதா கிராம சேவகர்கள்,காரியாலய உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

--