சிறுபான்மை கட்சி தலைவர்களுடன் சந்திப்பு




 


நூருல் ஹுதா உமர்


இலங்கை அரசியலில் முக்கிய கதாபாத்திரம் வகிக்கும் சிறுபான்மை கட்சி தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.