தீகவாபி தூபிக்குள் புனித தாது, பொக்கிஷங்கள் என்பவற்றை வைக்கும் நிகழ்வு






 வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாரை  தீகவாபி தூபிக்குள் புனித தாது, பொக்கிஷங்கள் என்பவற்றை வைக்கும் நிகழ்வு இன்று (14) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடன் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் நான்காவது பெரிய தூபிகளில் ஒன்றான தீகவாபியை புனரமைக்கும் பணிகள் கடந்த  2020 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


அஸ்ஹர் ஆதம்