லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது




 



லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (02) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 KG எடையுள்ள சிலிண்டர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது.

12.5 KG எடையுள்ள சிலிண்டர் ஒன்றின் புதிய விலையாக 3,690 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 KG எடையுள்ள சிலிண்டர் ஒன்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1,482 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 KG எடையுள்ள சிலிண்டர் ஒன்றின் விலை 18 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 694 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.