கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் இடம்பெற்றது. 2024 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் தலைவர்களை தெரிவு செய்யும் தகுதிகாண் காலத்தில் உரிய தகைமைகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு இவ்வாறு சின்னங்கள் சூட்டப்பட்டன.
பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல் சின்னத்தை அதிபர் அவர்கள் சிரேஷ்ட மாணவத் தலைவருக்கு சூட்டியதோடு பிரதி அதிபர்கள், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள் ஏனைய மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களைச் சூட்டுவதனையும் படங்களில் காணலாம் (நூருல் ஹுதா உமர்)
Post a Comment
Post a Comment