( வி.ரி.சகாதேவராஜா )
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத்தோற்றி 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் அக்கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டிக் கௌரவித்தனர்.
குறித்த மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சாதனையாளர்களை கௌரவித்தல்" வரலாற்று முக்கியத்துவமிக்க விழா கடந்த சனிக்கிழமை கல்லூரி அதிபர் அருட்சகோதரர் எஸ்.இ.ரெஜினோல்ட் தலைமையில் இடம்பெற்றது.
பற்றிமா கல்லூரியின் பழைய மாணவியும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அத்துடன் அக்கல்லூரியின் பழைய மாணவர்களான டொக்டர் மஹாலிங்கம் லட்சியன், பொறியியலாளர் எம்.கிரிதரன், சட்டத்தரணி ரவீந்திரன் சுஜீதா ஆகியோர் நட்சத்திர அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
கல்லூரி பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி குழுவினர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்பித்த மற்றும் வழிகாட்டிய அதிபர் ஆசிரியர்கள் அதிதிகளினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் இந்நிகழ்வின் போது அதிதிகளினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment
Post a Comment