(வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேசத்தில் தொல்லியல் வார விழிப்புணர்வு செயலமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
தொல்லியல் திணைக்களம் கடந்த 07/07/2024 தொடக்கம் 2024/07/14ம் திகதி வரை தொல்லியல் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
இவ் விடயம் தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் தொல்பொருள் இடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில்தொல்பொருள் இடங்களை பாதுகாப்பது தொடர்பாக கிராம மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி காணிபிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.எஸ்.கஸ்தூரி மற்றும் தொல்பொருள் இடங்கள் அமைந்துள்ள கிராமசேவகர் பிரிவுகளான தம்பிலுவில் 01 மேற்கு, விநாயகபுரம்03, கஞ்சிகுடியாறு, காஞ்சிரங்குடா, சாகாமம், தங்கவேலாயுதபுரம், சங்கமன் கிராமம் போன்ற இடங்களில் உள்ள கிராம சேவை உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள், ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திசங்க உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment