நூருல் ஹுதா உமர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தொடர்பாகவும், சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள 17 கிராம சேவைகள் பிரிவுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் கிளைகள், மகளிர் கிளைகள் புனரமைப்பு தொடர்பாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்ச பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயற்குழு வின் செயலாளருமான ஏ.சீ.சமால்தீன் தலைமையில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எல். அப்துல் மஜீத் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், கலைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான ஏ.எல். அப்துல் மஜீத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான எம்.ஐ.பிர்தௌஸ், முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் ஏ.ஏ.பஷீர், முன்னாள் கல்முனை மாநகர சபையின் மேயர் சிராஸ் மீராசாஹிப் அவர்களின் பிரத்தியோக செயலாளர் ஏ.ஜீ.எம்.நிம்சாத், கல்முனை மாநகர சபையின் வேட்பாளர் எம்.எம்.எம்.பாமீ அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.நசீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது பல்வேறு எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
Post a Comment
Post a Comment