தமிழர்களின் பெரும்தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஐயா அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாததொன்று. அன்னாரின் ஆத்மா இறைவனை சென்றடைய அனைவரும் பிரார்த்திப்போம். 2009ம் ஆண்டு விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் எம் மக்கள் நம்பிக்கையற்று இருந்த நேரத்தில் தமிழருடைய அரசியல் உரிமையை வென்றெடுக்க ஓர் இக்கட்டான சூழலிலும் கூட தன் திறமையினாலும், இராஜதந்திர ரீதியாகவும் செயற்பட்டு தமிழ் மக்களின் உரிமைக்காக சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அச்சமின்றி தனது தள்ளாத வயதிலும் மிகவும் நேர்த்தியாக செயற்பட்டார். தமிழ் மக்களுக்கும் இவ் நாட்டில் சம உரிமை உண்டென நம்பிக்கையளித்த நம்பிக்கையாளனாகவும் அவர் செயற்பட்டார். இணைந்த வடக்கு கிழக்கு என்ற வார்த்தையினை பிரயோகித்து தமிழ் மக்களை ஒன்றிணைக்க செயலாற்றிய தலைவராகவும் செயற்பட்ட இவருடன் பயணித்த நாட்களை எத்தனை தசாப்தங்கள் சென்றாலும் என்றும் மறக்க முடியாது. ஓர் இளைஞன் அதிலும் நான் அரசியலில் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அதனை செயல்படுத்தியும் காட்டியவர் இவரின் இழப்பானது எமது இனத்தின் பேரிழப்பாகும். அவரின் வழியில் எமது மக்களுக்கான பயணம் என்றும் தொடரும். இணைந்த வட கிழக்கில் எமது மக்களுக்கான உரிமைகள் கிடைக்கும் வரை தொடரும். எம்மை விட்டுப் பிரிந்த தலைவர்களின் கனவுகளை நனவாக்குவோம்.
#Sampanthan #Shanakiyan #MP #TNA #ITAK #Tamil #Parliament #lka
Post a Comment
Post a Comment