32 வருட அரசசேவையை பூர்த்தி செய்த நிருவாக உத்தியோகத்தர் மோகனராஜா ஓய்வு





 ( வி.ரி. சகாதேவராஜா)


திருக்கோவில் பிரதேச செயலகத்தில்  நிர்வாக உத்தியோகத்தராக மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி  தனது 32 வருட சேவையினை வழங்கி ஓய்வுபெறும் தெய்வநாயகம் மோகனராஜாவைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன்  தலைமையில்  நடைபெற்றது 

அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் அவரது சேவை பற்றி பலரும் உரையாற்றினார்கள்.

இறுதியாக சேவையை வியந்து பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.