இவ்வாண்டும் (2024) மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்குத் தெரிவு





 நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவிகள் இம்முறை நடைபெற்ற வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் 10 வெற்றி இடங்களை தனதாக்கி மாகாணப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் கல்வியிலும், விளையாட்டு, கலை, இலக்கிய போட்டிகளிலும் பிரகாசிக்கும் இந்த பாடசாலை மாணவர்கள் கடந்த காலங்களில் மாகாண மற்றும் தேசிய அளவில் பிரகாசித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம்.றிபாஸ் ,விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.என்.எம்.ஆபாக் ஆகியோர்களின் பயிற்சியின் பயனாக இந்த அடைவுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு சிறப்பான முறையில் தயார் படுத்திய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இணைப்பாடவிதான த்திற்கு பொறுப்பான உதவி அதிபர் எம்.எம். ஹாத்திம் ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தெரிவித்துள்ளார்