(வி.ரி.சகாதேவராஜா)
வெல்த் கோப் (Wealth coop) வங்கியின் 49வது கிளை காரைதீவில் நேற்று (13) வியாழக்கிழமை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
வங்கியின் முகாமையாளர் செல்வி டெலினா பீட்டர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து கொண்டார் .
வங்கியின் தலைவர் தேசமான்ய கீர்த்தி மகோத்தி முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பிக்க வங்கியின் பிராந்திய முகாமையாளர் தானியாவும் கலந்து கொண்டார்.
21 வருட சேவையை கொண்ட இந்த வங்கி அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று உஹன சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் இயங்கி வந்தது. தற்போது காரைதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டு இருக்கின்றது.
காரைதீவின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். கூட்டுறவு வங்கி என்ற காரணத்தினால் இங்கு எவ்விதமான வரியும் அறவிடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment