ULMN.முபீன்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சிறப்பு தூதுவராக ரஷ்யாவிற்கு பயனமானார் P.M.M.அம்சா (ஹம்ஸா)
ULMN.முபீன்
தனது நாற்பது வருட இராஜதந்திர சேவை இனிதே முடித்து சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய
அம்சா
அரசாங்கத்தின் விசேட
நியமனத்தின்
CDA ( Charge de Affairs)மூலம் சோவியத் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதுவராக நேற்று காலை 2/6/2024 பத்து மணியளவில் புறப்பட்டுச் சென்றார்.
தனது இராஜதந்திர சேவைக் காலத்தில்
எகிப்து ,சிங்கப்பூர்,இந்தியா,லக்சம்பேக், ஐரோப்பியயூனியன், பெல்ஜியம்,இங்கிலாந்து,துருக்கி,
சவூதி அரேபியா போன்ற நாடுகளில் சிறப்பாக தூதுவராக பணியாற்றி இலங்கை தாட்டிற்கு சர்வதேசரீதியில் பெரும் பங்களிப்புச் செய்திருந்தார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மிகத் தீவிரம் அடைந்திருந்த காலங்களில்
இவருடைய இராஜதந்திரப் பணி இலங்கை அரசிற்கு மகத்தானது காணப்பட்டது.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ் ஆயுத இயக்கங்கள்
முகாமிட்டிருந்த காலங்களில் அதனை எதிர் கொள்ளும் வகையில் இலங்கை அரசு அம்சாவை இந்தியாவின் தென் மாநிலங்களுக்கான விசேட தூதுவராக நியமித்தது.
சவால் நிறைந்த இந்தப் பணியை கனகட்சிதமாக ஹம்சா நிறைவேற்றினார்.
பின்னர் இங்கிலாந்து நாட்டை தளமாகக் கொண்டு புலிகள் மற்றும் தமிழ் ஈழம் கோரிக்கையாளர்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்த நிலையில் இங்கிலாந்து நாட்டிற்கான இலங்கை தூதுவராக பதவி உயர்த்தப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டார்.
அப்போதைய இலங்கை அரசிற்கு தலையிடியாக அமைந்த சனல் -4,மற்றும்
சர்வதேச மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைகள் போன்ற விடயங்களை சிறப்பாக கையாண்டு வெற்றி கண்டார்.
பின்னர் 26 மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பலம் பொருந்திய கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியன்
நாடுகளின் செயற்பாடுகள் இலங்கைக்கு சிக்கலாக மாறிய நிலையில் அதனை கையாள்வதற்காகவும் இடைநிறுத்தப்பட்ட GSP plus வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காகவும் ஐரோப்பிய யூனியனிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.
ஐரோப்பிய யூனியனில் சிறப்பாக பணியாற்றியதோடு ஐரோப்பிய நாடுகளிற்கும் இலங்கைக்கும் உறவை வலுப்படுத்தியதோடு இடைநிறுத்தப்பட்டிருந்த ஐரோப்பிய யூனியனின் Gsp-plus வரிச்சலுகையை நாட்டிற்கு பெற்றுக் கோடுத்தார்.
இஸ்லாமிய உலகிற்கு தலைமை தாங்கும் நாடாக துருக்கி நாடு தன்னை படிப்படியாக மாற்றிக் கொண்டு வரும் சூழ்நிலையில் அந்நாட்டிற்கான தூதவராக அம்சா பின்னர் நியமிக்கப்பட்டார்.
இவருடைய பதவிக் காலத்தில் இலங்கைக்கும் துருக்கிக்குமிடையிலான வர்த்தக மற்றும் ஏனைய உறவுகள் சிறப்பாக முன்னேற்றமடைந்தன.
பின்னர் இஸ்லாமிய உலகின் அதிமுக்கிய கேந்திர நாடான சவூதி அரேபிய நாட்டிற்கான தூதுவராக அம்சாநியமிக்கப்பட்டார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் நிலவிய காலகட்டத்தில் சவூதியில் இருந்து பல்வேறு நிதிகள் மற்றும் பெற்றோல் கிடைப்பதற்கு ஹம்சா அவர்களின் பங்களிப்பு பெரும் துணையாக அமைந்தது.
கடந்த 2023 ஜூன் மாதத்தில் ஹம்சா அவர்கள் 60 வயதை பூர்த்தி செய்த நிலையில் உத்தியோபூர்வமாக இராஜதந்திர சேவையில் இருந்து இளைப்பாற வேண்டியிருந்தது.
அம்சா இளைப்பாறிய போதும் ஹம்சா அவர்களின் சேவையின் அவசியம் கருதி அரசாங்கம் அவருக்கு ஆறு மாதங்களுக்கான சேவை நீடிப்பு வழங்கியது.
கடந்த மே மாதம் தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்து நாட்டிற்கு வந்த சூழ்நிலையில்
இலங்கை அரசிற்கு சோவியத் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிற்கிடையிலான போரின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை கையாளும் வகையில்
CDA Charge de Affairs
கடமைப் பொறுப்பை கொண்ட விசேட
தூதுவராக நியமிக்கப்பட்டு நேற்று ரஷ்ய தலை நகர் மொஸ்கோவிற்கு பயணமானார்.
உக்ரைன்,ரஷ்ய யுத்தத்தில் கூலிப்படையாக சென்று இரண்டு பக்கமும் மாட்டியுள்ள இலங்கை இராணுவத்தினரை பத்திரமாக பாதுகாக்கும் விசேட பொறுப்புடன்
இலங்கை ரஷ்ய வர்த்தக உறவு மேம்பாட்டையும் விசேடமாக கையாள இருப்பதாக தெரிய வருகிறது.
இவருடைய இராஜதந்திர சேவைக்காலத்தில் இவரின் உயிரிற்கு விடுதலைப் புலிகளால் பாரிய அச்சுறுத்தல் நிலவியமையும் இவ்விடத்தில் நினைவுபடுத்தப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.
இவர் கல்வி அமைச்சின் உயர் அதிகாரியாக கடமையாற்றிய காலத்தில்
அதிபர் வாண்மை விருத்திற்கு பொறுப்பாக இருந்து இலங்கையின் நாலா பக்கங்களிலும் தலைசிறந்த அதிபர்கள் உருவாக காரணமாக அமைந்தார்.
அத்தோடு கல்விச் சேவை ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களில் ஒருவராக கடமையாற்றிய காலங்களில் தொண்டராசிரியராக கடமையாற்றிய பலரை நிரந்தர ஆட்சியராக நியமிக்கப்பட காரணமாக அமைந்தார்.
இவர் இலங்கையின் நாட்டின் தலைசிறந்த இராஜதந்திரி என்ற வகையில் இலங்கையின் முக்கிய ஜனாதிபதிகள் ,பிரதமர்களின் நம்பிக்கைக்கு உரியவராக காணப்பட்பார்.
கோட்டபாய ராஜபக்ஸ ஜனாபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர்
ஹம்சா அவர்களை வெளிநாட்டமைச்சின் செயலாளராக நியமிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சிபாரிசு செய்த போதும் அது நடைபெறவில்லை.
இதற்கு அம்சா முஸ்லிம் என்பது காரணமாக இருந்திருக்கலாம் என இராஜதந்திரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
அம்சாவின் ரஷ்ய தூதுவர் பணி சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்.
அன்புடன்
ULMN. முபீன்
Post a Comment
Post a Comment