நீர்ப்பாசன அதிகாரியின் கைது திட்டமிடப்பட்ட சதி என பாராளுமன்றத்தில் அதாஉல்லாஹ் தெரிவிப்பு...
கடந்த சில தினங்களிற்கு முன்னதாக அக்கரைப்பற்று நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளரும், அவரது சாரதியும் இலஞ்ச ஊழல் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டது விடயமாக தேசிய காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அதாஉல்லாஹ் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் கூறுகையில் அது திட்டமிடப்பட்ட சதி என தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தங்களிலிருந்து அக்கரைப்பற்று மக்களை காப்பாற்றும் நோக்கில் அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி பாலத்தின் கீழுள்ள இருமருங்கினையும் தோண்டி விஸ்த்தரிக்கும் திட்டத்திற்காக அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கிடப்பட்டு ஆரம்பிக்கபடவிருக்கும் சந்தர்ப்பத்தில் நீர்ப்பாசன அதிகாரிக்கு இலஞ்சத்தை திணித்து கைது செய்துள்ளார்கள்.
பாலத்தின் இருமருங்கினையும் தோண்டி விஸ்த்தரிப்பதை விரும்பாத கள்ளத்தனமாக பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கின்ற ஒரு கும்பலினாலேயே இச்சதி இடம்பெற்றிருப்பதாக பாராளுமன்றத்தில் மிகத் தெளிவாக எடுத்துக்கூறினார்.
கள்ளத்தனமாக பணம் சம்பாதிக்கும் இக்கும்பலினால் அக்கரைப்பற்றிலுள்ள அரச அதிகாரிகள் சுதந்திரமாக தங்களது கடமையினை செய்ய முடியாமல் இருப்பதாகவும், கள்ளக் கும்பலை மீறி அரச அதிகாரிகள் செயற்பட முனைந்தால் இவ்வாறு கஞ்சாவை வைத்தும், இலஞ்சத்தை திணித்தும் அவர்களை பிடித்துக்கொடுக்கின்றார்கள். இதனால், அதிகாரிகள் பெரும் அதிர்த்ப்திக்கும் அச்சுறுத்தலிற்கும் ஆளாகியுள்ளார்கள்.
மட்டுமல்லாமல், MHM அஷ்ரப் அவர்களின் பெயரில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் SLMC யின் தலைவர் ரவூம் ஹக்கீமினால் உருவாக்கப்பட்ட பாடசாலையின் பெயரை அதிகாரிகளைக் கட்டி கள்ளத்தனமாக பெயர் மாற்றம் செய்த வழக்கு நீதிமன்றத்திலுள்ளது. குறித்த வழக்கு விடயமாக கல்முனை நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்க செல்லவிருந்த நபரை வழக்குக்குச் சென்றால் கஞ்சாவை வைத்து உள்ளே தள்ளுவேன் என கள்ளத்தனமாக பெயர் மாற்றிய தரப்பினர் அச்சுறுத்தியுள்ளார்கள். இவ்வாறே மூதூரிலும் அரச அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆகவே, இவ்விடயத்தினை யாரிடம் முறையிடுவது என மக்கள் அங்கலாய்த்துக்கொண்டிருப்பதனால், விசாரணைக்குழு அமைத்துத் தருமாறு சனாதிபதியினை அதாஉல்லாஹ் அவர்கள் வேண்டிக்கொண்டார்.
Post a Comment
Post a Comment