ஏறாவூர் Dr. ஜலீலா முஸம்மில் அவர்களுக்கு உலக தமிழ் மாநாட்டில் விருது
______
எழுத்தாளர் கவிஞர் நூலாசிரியர் டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்கள் தமிழகத்தில் தூரிகை வரையும் மின்மினிகள் எனும் ஹைக்கூ நூலுக்காக ஹைக்கூ பேரொளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மதுரை உலகத்தமிழ்ச்சங்கம், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், இனிய நந்தவனம் மாத இதழ் இணைந்து நடாத்திய "தமிழ் ஹைக்கூ : மூன்றாவது உலக மாநாடு" கடந்த 09/ ஜூன்/2024 அன்று மதுரை மாநகரில் உலகத்தமிழ்ச் சங்க வளாகத்தின் மித்ரா அரங்கில் பிரமாண்ட விழாவா நடைபெற்று முடிந்தது.
தமிழகத்திலிருந்தும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு நாடுகளிலிருந்தும் மாநாட்டின் பிரதிநிதிகளாகவும் சிறப்பு அழைப்பாளர்களாகவும்
200-க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்கள் ஆர்வத்தோடு மாநாட்டில் கலந்துகொண்டனர். இலங்கையில் இருந்து சிறப்பு விருந்தினராகவும் விருதாளராகவும் வைத்தியர் ஜலீலா முஸம்மில் அவர்கள் கலந்து கொண்டார்.
மாநாட்டுத் தொடக்க விழா,ஹைக்கூ கண்காட்சி, தூண்டில் மாநாட்டுச் சிறப்பு மலர் வெளியீடு, ஹைக்கூ வாசிப்பரங்கங்கள், ஹைக்கூ அனுபவப் பகிர்வரங்கங்கள், ஹைக்கூ நூல்கள் வெளியீடு, ஹைக்கூ கவிதைப்போட்டி பரிசளிப்பு, அயலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், ஹைக்கூ ஓலைச்சுவடிகள் கையளிப்பு, உங்கள் நண்பன் மாத இதழ் விருது வழங்கல், மாநாட்டு நிறைவு விழா என மாநாடு பல்வேறுபட்ட நிகழ்வுகளோடு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட புரவலர் ஹாஷிம் உமர் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகர்) அவர்கள் கலந்து கொண்டார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வில் கவி முதுசமான ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்களோடு விழா ஆலோசகர் ஒருங்கிணைப்பாளர்
கவிஞர் மு.முருகேஷ், இனிய நந்தவனம் மாத இதழ் சந்திரசேகரன்,இனிய நந்தவனம் மாத இதழ் ஆலோசகர் ரொட்டோரியன் மேஜர் டோனர் டாக்டர் கே.சீனிவாசன், கவிஞர் அமரன், கவிஞர் தங்கமூர்த்தி,
பாரதியாரின் கொள்ளுப்பேத்தி உமா பாரதி, எழுத்தாளர் உமர் பாரூக், கவிஞர் பச்சை பாலன், கவிஞர் இமாஜான் போன்ற பல்வேறு இலக்கியப் பிரபலர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment
Post a Comment