ஹஜ் யாத்திரை மேற்கொண்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த அப்துல் கஃபூர் ஹாஜி மக்காவில் மறைவு




 

#Rep/NT.Mashoor.
மரண அறிவித்தல்.


ஹாதீ ட்ரவல்ஸ் நிறுவனத்தின் ஊடாக ஹஜ் யாத்திரை மேற்கொண்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆதம் லெப்பை அப்துல் கஃபூர் என்பவர் இன்று காலை 8 மணியளவில் காலமானார்.

انا لله وانا اليه راجعون


இவருடைய மரணம் மக்கா கிங் அப்துல் அஸீஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.


அறஃபா மினாவில் நிறைவேற்றப்பட வேண்டிய ஹஜ் கடமைகளை பூர்த்தி செய்த பின்னர், இறுதியாக ஹஜ்ஜுடைய தவாஃபுக்காக வேண்டி மக்கா திரும்பிய நிலையிலே இவருடைய திடீர் மரணம் சம்பவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஹஜ் கடமைகளின் இடைநடுவே காலமான அன்னாரை வல்ல நாயன் ஷுஹதாக்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக!

ஆமீன்.