பல்கலைக்கழக கற்கை நெறி தெரிவு மற்றும் விண்ணப்பிப்பது பற்றி வழிகாட்டல் செயலமர்வு
நூருல் ஹுதா உமர்
USF ஸ்ரீலங்கா அமைப்பு மற்றும் சாய்ந்தமருது இளங்கலை பட்டாதாரி அமைப்புக்கள் இணைந்து 2023 உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இலவசமாக பல்கலைக்கழக கற்கை நெறிகளை தெரிவு செய்தல், மற்றும் விண்ணப்பிப்பது பற்றியும், கையேடுகள் பற்றியும் செயலமர்வு சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எப்.எச்.சிப்லி அவர்களினால் நடாத்தப்பட்டது.
இச் செயலமர்வில் சுமார் 120 க்கு மேற்பட்ட இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தகுதியான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந் நிகழ்வில் USF ஸ்ரீலங்கா அமைப்பின் செயற்பாட்டாளர்கள், அமைப்பின் ஆலோசகர்கள் மற்றும் இளங்கலை பட்டதாரி அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment