போக்குவரத்து பாதுகாப்பிற்கான சீருடைப் பொதி





 (வி.ரி.சகாதேவராஜா)

 கிழக்கு மாகாண முதலமைச்சர் பணிமனையினால் வழங்கப்பட்ட  பாடசாலை மட்டத்திலான போக்குவரத்து பாதுகாப்பிற்கான சீருடைப்  பொதி கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

 அந்த வகையில் திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு சீருடைப் பொதி
வழங்கும் நிகழ்வு வலயக் கல்வி பணிப்பாளர் ரி.உதயகுமார் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் பிரதிக்  கல்விப் பணிப்பாளர்  - (கல்வி அபிவிருத்தி) 
 ஏ. நசீர்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.