புனித அரபா தினத்தில், பலஸ்தீனுக்காகவும் பிரார்த்தனை




 அரபா தினம் (Day of Arafah, அரபி: يوم عرفة‎) இசுலாமிய நாட்காட்டி யில் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் 9 ம் தேதி கடைபிடிக்கப் படுகிறது. அரபா தினம் அன்று மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா குன்று அருகில் உள்ள மைதானத்தில் ஹஜ் உடைய காரியங்கள் செய்வர்.ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் தினம் அரபா தினமாகும். 

ஒரேயொரு கட்டளை, சக்தி உள்ளவர் ஹஜ் செய்ய வேண்டும். அவ்வளவு தான் இன - மொழி - நிற வேறுபாடின்றி அனைவரும் ஒரு இடத்தில் சேர்ந்து அந்த ஒரேயொரு வணக்கத்திற்குரியவனை போற்றி புகழ்கின்றர். 


கட்டுப்படுதல் என்பதற்கு ஆகப் பெரிய உதாரணம் தான் ஹஜ் வழிப்பாடு. ஏகத்துவ தந்தை , அல்லாஹ்வின் நண்பர் இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களினதும் அவரின் குடும்பத்தினரினதும் தியாகத்தை பறைசாற்ற லட்சக்கணக்கான இறை அடியார்கள் உலகின் முதல் ஆலயத்தில் கூடியுள்ளனர். ஸுப்ஹானல்லாஹ்! 


இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) இஸ்லாமிய சன்மார்க்கத்திற்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமே உரித்தானவர். 


இப்ராஹீம், யூதராகவோ, கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை.


இப்ராஹீம் விஷயத்தில் உரிமை படைத்த மக்கள் அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், நம்பிக்கை கொண்டோருமே. அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டோரின் பாதுகாவலன்.


அல்குர்ஆன் 3: 67 - 68



அரபா தினத்தின் சிறப்புகள்

அரபா தினம் ஹஜ் பெருநாளைக்கு முதல் தினம் ஆகும்.

அரபா தினத்தில் இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் இறுதிப் பேருரை நடைபெற்றது.

அரபா தினம் அன்று மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா குன்று அருகில் உள்ள அரபா மைதானத்தில் ஒன்றுகூடி இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பர்.

ஹஜ் செல்ல வசதி இல்லாதோர் அரபா தினத்தில் அவரவர் இடத்திலேயே நோன்பு வைப்பர்