(எஸ்.அஷ்ரப்கான்)
அம்பாறை மாவட்ட கல்முனை தொகுதி வலய அமைப்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கல்முனை மாநகர சபை வேட்பாளர் எஸ்.எல்.எஸ்.முஹீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி கல்முனைத் தொகுதியின் வட்டாரம் 12 தொடக்கம் 17ம் வட்டாரம் வரையான பகுதிகளுக்கே
நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment