பாத யாத்திரீகர்களுக்கு இஸ்லாமியர் பழரசம்





 ( வி.ரி. சகாதேவராஜா)


யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நதி -  கதிர்காமம்  பாதயாத்திரை குழுவினர் 37ஆவது நாளில் இன்று (18) செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனையில் பயணித்தபோது இஸ்லாமிய பெருமக்கள் அடியார்களுக்கு பழரசம் வழங்கி கௌரவித்தனர்.

இன மத நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக இச் சம்பவம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு தரிசனம் செய்தனர்

அங்கு ஆலய பரிபாலன சபைத் தலைவர் கி.ஜெயசிறில் குடும்பத்தினர் அடியார்களுக்கு காலை ஆகாரம் வழங்கினர்.

மேலும் பல அடியார்களுக்கு பாலமுனை அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று போன்ற இடங்களில் சென்று காலை ஆகாரம் வழங்கினர். யாத்திரைக்குழு ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜாவும் உடனிருந்தார்.

பின்னர் அடியார்கள் அக்கரைப்பற்று சென்று தங்கியிருந்தனர்.

நாளை தம்பட்டை தம்பிலுவில் திருக்கோவில் சென்று விநாயகபுரத்தில் தங்குவார்கள்.

எதிர்வரும் 29ஆம் தேதி உகந்தை மலையை அடைய இருக்கின்றார்கள். 30ஆம் தேதி காட்டுப்பாதை திறக்கப்பட்டதும் முதல் நாள் காட்டுக்குள் பிரவேசிக்க இருக்கின்றார்கள்