சாம்பியனானது காரைதீவு





(வி.ரி. சகாதேவராஜா)

 களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகம் நடாத்திய கிழக்கு மாகாண கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகம்(KBC) வெற்றிவாகை சூடி சாம்பியனானது.  

இச் சுற்றுத் தொடரில், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 கூடைப்பந்தாட்ட  கழகங்கள் பங்குபற்றின. 

சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியானது நேற்று முன்தினம் (09) ஞாயிற்றுக்கிழமை களுதாவளை மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றது.

 இறுதிப் போட்டியானது காரைதீவு கூடைப்பந்தாட்ட விளையாட்டு கழகத்திற்கும், சிவானந்தா கூடைப்பந்தாட்ட  விளையாட்டு கழகத்திற்கும் இடையே  இடம்பெற்றது. 

இதில், காரைதீவு  கூடைப்பந்தாட்ட விளையாட்டு கழகம்   81:69  புள்ளியின் அடிப்படையில்  வெற்றியினை தமதாக்கி கெனடி  கூடைப்பந்தாட்ட சுற்று தொடரின் சாம்பியனானது.


 காரைதீவு கூடைப் பந்தாட்ட விளையாட்டு கழகம் சுற்றுதொடரின் முதலாவது போட்டியில் சிவானந்தா கூடைப்பந்தாட்ட  விளையாட்டு கழகத்தை வென்று, இரண்டாவது போட்டியில்  தன்னாமுனை கூடைப்பந்தாட்ட கழகத்தை வென்று ,அரை இறுதிப்போட்டியில் களுதாவளை மகா வித்தியாலய கூடைப்பந்தாட்ட அணியை  வென்று இறுதிப் போட்டிக்கு தெரிவானதும் குறிப்பிடதக்கது.

 கெனடி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் த. சர்ஜின் தலைமையில் நடைபெற்ற இவ் இறுதிச்சுற்று நிகழ்வுக்கு   அதிதிகளாக ச. நந்தகுமார் ( அம்பாறை மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ) களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் தலைவர் க.பாஸ்கரன், சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய பரிபால சபையினர், செட்டிபாளையம்  கண்ணகி அம்மன் ஆலய தலைவர் கலந்து சிறப்பித்தனர். 

 இச்சுற்றுதொடரானது   7, 8,9, ஆகிய  திகதிகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.