வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?






ஒவ்வொரு மொபைல் ஃபோனுக்கும் ஐ.எம்.இ.ஐ எண் என்று அழைக்கப்படும் தனித்துவமான எண் உள்ளது என்று மொபைல் தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் 


 உள்ளது என்று மொபைல் தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் உள்ள அனைவருக்கும் தெரியும்.

மொபைல் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ இந்த எண்ணைக் கொண்டு நாம் தேடுகிறோம். இதன் உதவியால் காவல்துறை திருடியவர்களை கண்டுபிடித்தும் உள்ளது.

ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு பிரத்யேக எண் உள்ளது என்றாலும், இந்த சிறப்பு எண்ணின் குளோனிங் அல்லது அதில் மாற்றங்கள் செய்யப்படுவது பற்றியும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

பங்களாதேஷின் மொபைல் ஃபோன் சேவை நிறுவனமான ’ரோபி’-யின் தலைமை நிறுவன மற்றும் ஒழுங்குமுறை அதிகாரி ஷாஹித் ஆலம் தெரிவித்த விஷயங்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைநகர் டாக்காவில் உள்ள தொலைத்தொடர்பு இயக்குனரகத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த கருத்தரங்கில் அவர் இதைத்தெரிவித்தார்.

"வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண்ணுடன் ஒன்றரை லட்சம் ஃபோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஃபோன்கள் அனைத்தும் போலியானவை,” என்று கருத்தரங்கில் பேசிய அவர் குறிப்பிட்டார்.