தேதி: பிப்ரவரி 5, 2024
இடம்: மக்களவை, இந்திய நாடாளுமன்றம்
காட்சி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
பேச்சாளர்: பிரதமர் நரேந்திர மோதி
வசனம்: "சபாநாயகர் ஐயா, நான் புள்ளிவிவரங்களுக்குள் வரவில்லை. நாட்டின் மனநிலையைப் பார்க்கிறேன். இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும். பாஜக மட்டும் 370 இடங்களைப் பெறும்."
தேதி: ஜூன் 4, 2024
காட்சி: லோக்சபா தேர்தல் முடிவுகள் -
பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கு 20-க்கும் அதிகமான இடங்கள் பின்தங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலில், கடந்த பத்து ஆண்டுகளில், காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.
19-ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி, "ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் எந்த அரசாங்கமும் நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்க முடியாது," என்று கூறினார்.
இந்தியாவின் முதல் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஜவஹர்லால் நேரு, 52 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1962-இல், தொடர்ந்து மூன்று பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
2024 பொதுத்தேர்தல் முடிவுகள், நரேந்திர மோதி மூன்றாவது முறையாகப் பிரதமராக முடியும் என்பதைக் காட்டுகிறது. ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களைப் போல, இந்த முறை அவரால் பெரும்பான்மை எண்ணிக்கையைத் தொட முடியவில்லை.
இந்தத் தேர்தலில் '400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்' என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கூறியது தவறு என நிரூபிக்கப்பட்டது.
Post a Comment
Post a Comment