பாசிக்குடா கடலில் மூழ்கிய இளைஞர், மீட்பு





 காத்தான்குடி இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி ஆபதான நிலையில் மீட்கப்பட்டு உயிர் தப்பினார். அல்ஹந்துலில்லாஹ்.

நண்பர்களோடு பாசிக்குடா கடலில் நீராட வந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த இளைஞர் நீரில் மூழ்கியுள்ளார்.
இவர் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதான வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
நீரில் மூழ்கிய உடனே நண்பர்களின் தீவிர முயற்சியால் அவசர சேவையான 1990க்கு தொடர்பு கொண்டுள்ளனர், குறித்த இளைஞர் தற்பொழுது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக வைத்தியசாலைக்கு விரைந்து செயற்பட்ட ஒட்டமாவடி அகீல் எமெர்ஜென்சி ஸ்தாபகர் நியாஸ் ஹாஜியார் சம்பவத்தை கேட்டறிந்து குடும்பத்தாரையும் தொடர்பு கொண்டு சம்பவத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
தகவல்: நியாஸ் ஹாஜியார்
@noordeen msm