இலஞ்ச ஊழல் ஆணை குழுவினால் நேற்று மாலை, கைது செய்யப்பட்ட நீர்ப்பாசன பொறியியலாளரையும், அவரது சாரதியையும், இந்த மாதம் 27 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று கட்டளை பிறப்பித்துள்ளது
குறித்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேற்றைய தினம் கொழும்பிலிருந்து வந்த இளைஞர் ஊழல் ஆணை குழு அதிகாரிகளால், அக்கரைப்பற்றில் வைத்து,கைது செய்யப்பட்டு இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் அவர்கள் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டிருந்த வேளையில் இந்த கட்டளை அக்கரைப்பற்று, நீதிமன்ற கௌரவ நீதிபதி அவர்களினால் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
குறித்த சந்தேக குறித்த குற்றச்சாட்டப்பட்டவர்கள் ரூபா 2 லட்சத்தினை லஞ்சமாக பெற்றிருந்ததாக லஞ்ச ஊழல் ஆணை குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Post a Comment
Post a Comment