ரஷித் கானின் ‘தவறு’, தென்னாப்பிரிக்காவின் ‘நல்வாய்ப்பு’




 


2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக, தென் ஆப்ரிக்கா அணி தகுதி பெற்றது.

டி20 உலகக் கோப்பை அரையிறுதி பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டம் ஒருதரப்பாக அமைந்தது. ஆடுகளத்தை சரியாகக் கணிக்காமல் ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது அவர்களின் இத்தனை ஆண்டு கடின உழைப்பை வீணாக்கியது.

இதுவரை ஐசிசி நடத்திய அனைத்துப் போட்டிகளிலும் அரையிறுதியைக் கூட தாண்டியதில்லை, ‘சோக்கர்ஸ்’ என்ற பெயரெடுத்த தென் ஆப்ரிக்க அணி அரையிறுதியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி முதல்முறையாக இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது.

கேப்டன் எய்டன் மார்க்ரம் தலைமையில் தென் ஆப்ரிக்கா அணி 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை கடந்த 2014ம் ஆண்டு வென்றிருந்தது. அதன்பின் இதுவரை ஐசிசி சார்பில் எந்தஒரு கோப்பையையும் தென் ஆப்ரிக்கா அணி வென்றதில்லை. ஆனால், இந்த முறை லீக் போட்டி முதல் அரையிறுதிவரை ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியுள்ளது.