தற்போதைய மழை நிலைமை காரணமாக பாதுக்கை நகரின் ஊடாக பாயும் புஸ்செலிய ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுக்கை நகருக்கு செல்லும் இரண்டு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுக்கை ஹங்வெல்ல வீதியும் பாதுக்கை இங்கிரிய வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக பாதுக்கை நகரில் உள்ள பல தாழ்வான வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Post a Comment
Post a Comment