ஆட்கடத்தலை எவ்வாறு தடுப்பது?





 (வி.ரி. சகாதேவராஜா)


ஆட்கடத்தலை எவ்வாறு தடுப்பது? என்பது தொடர்பிலான பயிற்சி பட்டறையொன்று நேற்றுமுன்தினம்(11) செவ்வாய்க்கிழமை காரைதீவில் நடைபெற்றது.

 மனித அபிவிருத்தி தாபனம் ஏற்பாடு செய்த இப் பயிற்சிப்பட்டறை தாபன இணைப்பாளர் பி.சிறிகாந்த் தலைமையில் காரைதீவு லேடிலங்கா மண்டபத்தில் நடைபெற்றது.

 கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர்  ஏ.பீ.ஏ. அசிஸ் வளவாளராக செயற்பட  மனித அபிவிருத்தி தாபன கிழக்கு மாகாண ஆலோசகரும் உதவிக் கல்வி பணிப்பாளரும் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளருமானவி.ரி. சகாதேவராஜா தொடக்கவுரையாற்றினார்.

இதில் அரச உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் கொவிட் தாக்கத்தின் பின் பொருளாதார  மற்றும் உணவு நெருக்கடி காரணமாக பெண்கள் அதிகமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்த வீட்டு பணியாளர்களாக சென்றுள்ளனர். இதன் பின்னணியில் பாலியல் சுரண்டல், புலம்பெயர்ந்த பெண் தொழிளாளர்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் கட்டாய திருமணம் என்பன தொடர்ந்து ஆட்கடத்தலை துரிதப்படுத்துகின்றது. 

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் மனித அபிவிருத்தி தாபனம் தடுத்தல் பாதுகாத்தல் மற்றும் வழக்கு பதிவிடல் உபாயங்களினூடாக  ஆட்கடத்தலை எதிர்த்து போராடுவதற்கு பங்களிப்பு செய்தல் திட்டத்தினை Global Initiative ( க்லோபல் இனிடியேட்டிவ்) அனுசரணையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. 

 அத்துடன் ஆட்கடத்தல் செயற்பாடானது சட்டவிரோத செயற்பாடுகளில் ஒன்றாக காணப்படுவதால் இவற்றில் இருந்து மக்களை பாதுகாப்பது எல்லாதுறையினரினதும் கடமை என்பதுடன் தனி ஒவ்வொரு மனிதனது பொறுப்பாகும் என மனித அபிவிருத்தி தாபன திட்ட இணைப்பாளர் பி. ஸ்ரீகாந் தெரிவித்தார்.

உதவி இணைப்பாளர் எ.எம்.றியால் நிகழ்வை நெறிப்படுத்தினார்.