.(சுகிர்தகுமார் 0777113659 )
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரெட்ணம் சுவாகர் எழுதிய 'இரகசியங்களால் ஆன ஒற்றைவரிக்கோடு' எனும் நூல் வெளியீட்டு விழா பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று (26) மாலை இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் விசேட அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் கலந்து கொண்டார்.

பாராட்டி உரையாற்றினர்.
இதன் பின்னராக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்;க அதிபர் சி.ஜெகராஜன் இச்சிறப்பு நிகழ்வில் தான் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தமையிட்டு மகிழ்ச்சி தெரிவித்ததுடன் நிருவாக துறையில் தன்னுடன் பணியாற்றும் ஒருவர் கலை இலக்கிய துறையில் சிறப்புற்று விளங்குகின்றமை பெருமை அளிப்பதாக கூறினார்.எழுத்தாற்றல் தொடர்பிலும் அவரது இலக்கியதுறை சார்ந்த பயணம் தொடர்பிலும் பாராட்டி பேசினர்.
நிகழ்வில் பிரதேச செயலக உயர் அதிகாரிகள் உதவிப்பிரதேச செயலாளர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரச உத்தியோகத்தர்கள் இலக்கிய நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment