களைகட்டும் திருமலை பளிங்கு கடற்கரை





 ( வி.ரி. சகாதேவராஜா)

 திருகோணலை  பளிங்கு கடற்கரை ( மார்பிள் பீச்) அண்மைக் காலமாக உல்லாச பயணிகளால் களைகட்டி வருகிறது.

 கடந்த ஹச் பெருநாள் அன்று ஏகப்பட்ட சுற்றுலா பிரயாணிகள் அங்கே விஜயம் செய்திருந்தனர்.

 தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு விஜயம் செய்து நீராடி வருகின்றார்கள் .

சமகால காலநிலையை கருத்தில் கொண்டு அங்கு தினம் சுற்றுலா பயணிகள் அதிகரித்து அதிகரித்து வருவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.